Thursday, March 13, 2008

யாழ்வாணன் ஆயிரத்தில் ஒருவர்.

இவரது பதிவுகளை பெற விரும்புவோர் தொடபு கொள்ள வேண்:டிய முகவரி
kavithaikuyil@gmail.com







யாழ்வாணன் ஆயிரத்தில் ஒருவர்.
நம் மண்ணின் பெருமைக்கு.


நம் ழத்து இலக்கிய உலகில் யாழ்வாணன் என்ற பெயர் நன்கு புகழ் பெற்றது. நகர மண்டபக் காப்பாளராக (chief caretaker) அவர் கடமையாற்றும் யாழ்ப்பாண மாணகர சபை அலுவலகத்தில் கூட நா.சண்முகநாதனிலும்பார்க்க யாழ்வாணனே முக்கியமானவர் .

யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள். யாழ்வாணனும் ஒருவர் தொடக் காலத்தில் இருந்தே அதன் செயலாளராகப் பணிபுரிந்தார் யாழ் இலக்கிய வட்டத்தின் வளர்ச்சிக்கான காரணங்களுக்குள் அவரது அயராத இடக்கமான உழைப்பு மிகவும் முக்கியமானதொன்று.

யாழ்வாணன் அவர்கள் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட "சுகாதார ஒலி" என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்தார்.
1968 ஆம் ஆண்டு நடை பெற்ற சுகாதார -குடி நல வார விழாக்குழுவின் செயலாளராக கடமையாற்றினார்.

அதோடு "எழில் மிகு யாழ்ப்பாணம்" என்ற வாடாமலரையும் வெளியிட்டு அறிஞர் பெரு மக்களின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டார்.
இலக்கிய விழாக்கள் .

நாடக--நடன விழாக்கள் பொதுக்குகூட்டங்கள் ஆகியவற்றைச் செம்மையாக ஒழுங்கு செய்து சிறப்பாக நடத்தி முடிக்கும் சக்தி வாய்ந்தவர் நம் யாழ்வாணன் அவர்கள் .

சிறந்த சிறுகதையாசிரியராக யாழ்வாணன் பல பரிசுகளைப் பெற்ற சிறப்புமிக எழுத்தளர்.

சிறந்த சேவையாளர் பண்பாணவர் இவர் ஆயிரத்தில் ஒருவர்.
மண்ணை விட்டு சென்றாலும் நம் இதயங்களை விட்டு செல்லவில்லை
இன்றும் இவரால் படைக்கப்பட்ட "மலர்ந்த வாழ்வு "சிறுகதைகள் மூலம் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிண்றார். இவருக்கு என் இதய சமர்ப்பணமாக இந்த பதிவினை சமர்ப்பிக்கின்றேன்.
இவரது மலர்ந்த வாழ்வு என்ற மலரில் வரும் கதைகள் யாவும் நம்மையும் மலர்ந்து வியக்க வைக்கிண்றது இதில் அமரத்துவம் என்ற சிறுகதை என்னை கண்ணீர் சிந்த வைத்தது. அருமையான படைப்புக்கள்
என் சமர்ப்பணம்
ராகினி
ஜேர்மனி
.